பசி என்னும் நோய்




உணவை வீணாக்கும் மனிதர்களே

ஒருவேளை பட்டினியாக இருந்து பாருங்களே,

உணவின்றி தவிக்கும் உள்ளங்கள்

உலகில் உண்டு காணுங்கள்.


பசிக்கும் முன்பே உண்போரும் உண்டு,

பசி உயிர் கொல்லும் வரை போரிடுவோரும் உண்டு,

பசி என்னவென்று அறியாத பணக்காரரும் உண்டு,

பசி தவிர ஏதும் அறியாத பிச்சைக்காரரும் உண்டு.


அவன் ஏழையாக பிறந்தது யார் தவறு,

இறைவனை குறை சொல்லி என்ன செய்வது.

மனிதனுக்கு மனிதன் உதவ மனதில்லை,

தேவைக்கு அதிகம் உள்ளது உனதில்லை.

பகிர்ந்து உண்டு வாழ்ந்திடு மனிதனே,

வறுமையால் வாடுகிறது ஏழை என்னும் ஓர் இனமே.


வறுமையும் பசியும் கொடிய நோயாகும்,

அது ஏழைகளை மட்டும் அதிகம் தாக்கும்,

உணவின்றி உயிர் வாழ யாரால் முடியும்,

மனிதன் மனம் வைத்தால் ஏழ்மை ஒழியும்.


                               மா.விக்னேஷ்